நோக்கு

இலங்கையில் மிகச்சிறந்த சுகாதார சேவையை வழங்குகின்ற மாகாண சுகாதார திணைக்களமாவதன் மூலம் ஆரோக்கியம் நிறைந்த சுபீட்சமான தெற்கை பெருமிதத்துடன் முன்னெடுத்துச்செல்லுவதற்கு பங்களிப்புச் செய்வதாகும்.

அறிமுகம்

இருபத்தைந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தென் மாகாண சுகாதார திணைக்களத்தின் நோக்கமாகும். தென் மாகாணம் துரித அபிவிருத்தியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் மக்களின் சுகாதார தேவையை உச்ச அளவில் நிறைவேற்றுவதன் ஊடாக அபிவிருத்தியை நோக்கிச் செல்கின்ற பயணத்திற்கு பாரியளவில் உதவிசெய்யப்படுகின்றது.

மாகாண சுகாதார சேவையின் நோயாளர் நற்பணி சேவையும் நிவாரண சுகாதார சேவையும் மக்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை வழங்குவதில் முன்னணியில் திகழ்கிறது. ஆதார வைத்தியசாலைகள், ஆரம்ப சுகாதார வைத்திய அலகுகள் என்பவற்றின் மூலம் நோயாளர் நற்பணி சேவையை வழங்குகின்றது. நோய் நிவாரண சுகாதார சேவை மாகாணத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அமைந்துள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மூலமும் விசேடித்த இயக்கங்கள் மூலமும் வழங்கப்படுகின்றது.

மேற் குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்காக தென் மாகாண சுகாதார திணைக்களத்தில் செயற்படுகின்ற நிறுவன கட்டமைப்பில் கடந்த சில வருடங்களில் செயற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கை திருத்தத்தின் பிரகாரம் நிறுவன எண்ணிக்கையில் சிற்சில திருத்தங்கள் இடம்பெற்றதோடு, அதன் பிரகாரம் தென் மாகாணத்தில் தற்பொழுது 207 நிறுவனங்கள் செயற்படுகின்றன. இவற்றிற்கிடையில் 8 ஆதார வைத்தியசாலைகள், 51 பிரதேச வைத்தியசாலைகள், 59 ஆரம்ப வைத்திய நற்பணி அலகுகள் என்பவற்றின்மூலம் மாகாணத்தில் நோயாளர் நற்பணி சேவையும் 49 சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மற்றும் 11 விசேடித்த இயக்கங்கள் என்பவற்றின் மூலம் நோய் நிவாரண சுகாதார சேவைகளும் வழங்கப்படுகின்றன.