நோக்கு

சுதேச மருத்துவ முறையின் ஊடாக ஆரோக்கியமான மக்கள் சமுதாயமொன்றை உருவாக்குதல்

அறிமுகம்

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குமேல் பெருமைமிக்க வரலாற்றுக்கு உரித்து கோறுகின்ற சுதேச மருத்துவ முறையின் ஊடாக மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதன்மூலம் உடல், உள ஆரோக்கியம் மிக்க மக்களை உருவாக்குவது தென் மாகாண சுதேச மருத்துவ (ஆயுர்வேத) திணைக்கத்தின் பிரதான நோக்கமாகும்.

நோய் நிவாரணம், சிகிச்சையளிக்கும் சேவை மற்றும் சுதேச மருத்துவ ஊக்குவிப்பு நடவடிக்கைகள் என்பவற்றை விரிவாக்கும் நோக்கத்தில் தென் மாகாண சுதேச மருத்துவ (ஆயுர்வேத) திணைக்களத்தின் மூலம் நடப்பு அபிவிருத்தி செயற்பாடுகள் பலவற்றை நிறைவேற்றுவதன் ஊடாக பயனுறுதிமிக்க சேவைகளை வழங்குவதும் உயர் முன்னேற்றத்தை அடைவதும் மிகவும் முக்கியமானதாகும்.

தென் மாகாண சுதேச மருத்துவ (ஆயுர்வேத) திணைக்களத்தின் கீழ் 10 சுதேச மருத்துவ நிலையங்கள் மற்றும் 26 மத்திய மருந்தகங்கள் மக்களுக்கு சிகிச்சையளிக்கும் சேவைகளை வழங்குகின்றன. இவற்றிடையே ஜனாதிபதி செயலணியினால் மேம்படுத்தப்பட்ட மாவட்ட வைத்தியசாலைகளான காலி சுதேச மருத்துவ நிலையம், அபரெக்க சுதேச மருத்துவ நிலையம் மற்றும் பெலிஅத்த சுதேச மருத்துவ நிலையம் என்பவற்றின் மூலம் விசேட சேவைகள் பல செயற்படுத்தப்பட்டன.