நோக்கு

தென் மாகாண மக்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்குகின்ற வலுவான மற்றும் சிறந்த நிர்வாகம் உள்ள உள்ளூராட்சி நிறுவன முறைமையொன்றை உருவாக்குதல்

அறிமுகம்

தென் மகாண சபை அதிகார பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 03 மாநகர சபைகள், 04 நகர சபைகள், 42 பிரதேச சபைகள் என்பவற்றில் அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி ஏற்பாடுகள் மூலம் அப்பணிகளை நிறைவேற்றுவதற்காக அந்த நிறுவனங்களை நெறிப்படுத்துதல், அவற்றிற்கு வழிகாட்டுதல், அறிவுறுத்தல் வழங்குதல், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தேவையான நிதி ஏற்பாடுகளை வழங்குதல் என்பவற்றுடன் தொழில்நுட்ப சேவைகளையும் ஏனைய சேவைகளையும் வழங்கி மாகாணத்தின் பொதுமக்களுக்கு அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மிக நல்ல நிலைக்கு கொண்டுவருவதற்காக நடவடிக்கை எடுத்தல் உள்ளூராட்சி திணைக்களத்தின் பொறுப்பாகும்.