நோக்கு

நிலைபேறான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியின் திருப்திகரமான பயன்களை அனுபவிக்கின்ற தேசிய மரபுரிமைகளால் போஷிக்கப்பட்ட தெற்கு வாழ் மக்களின் சமுதாயத்தை உருவாக்குதல்

அறிமுகம்

தென் மாகாணத்தில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு உரிய அபிவிருத்தி செயற்பாடுகளை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட நிறுவனமான தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபை விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் ஆகிய பொருளாதாரத்தின் பிரதான மூன்று பிரிவுகளுக்கும் உரிய நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் தயாரித்து செயற்படுத்துகிறது.

மேற்குறிப்பிட்ட பிரிவுகளுக்கு உரியதாக சேவைகளை வழங்குகின்ற தென் மாகாணத்தின் ஏனைய அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள சட்ட வரம்புக்குள் செயற்படுத்த முடியாத மற்றும் குறைபாடுகள் இருக்கின்ற துறைகளை அடையாளம் கண்டு அவற்றின் உற்பத்தியையும் உற்பத்தித்திறனையும் உயர்த்துவதற்கு பொருத்தமான நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் தயாரித்து செயற்படுத்துவது இந்நிறுவனத்தின் அடிப்படை நோக்கமாகும்.

அதன் பிரகாரம் 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பின்வரும் தொனிப்பொருளின் கீழ் கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பெரும்பாலான கருத்திட்டங்கள் இற்றைவரை தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்ட கருத்திட்டங்களுக்கு மேலதிகமாக 2017ஆம் ஆண்டிலிருந்து நிறுவன நிதி சுயாதீனதன்மையை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய கருத்திட்டங்களாகும்.