நோக்கு

இலங்கையில் முன்னணி பயணிகள் போக்குவரத்து சேவை வசதிகளை வழங்குபவராக இருத்தல்

அறிமுகம்

தென் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து ஒழுங்குமுறைப்படுத்தும் நிறுவனம் என்ற வகையில் அரசாங்கம் மற்றும் தனியார் ஓட்டுனர்களின் பங்களிப்பின் அடிப்படையில் தரமாகவும் போதியளவிலும் நாட்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி செயற்பாட்டுக்குப் பொருந்தக்கூடிய வகையில், முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து வலையமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதற்காக திட்டமிடல், அந்த திட்டத்தை செயற்படுத்துதல், கண்காணித்தல், நிர்வகித்தல் ஆகிய பணிகள் இந்த அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் 2017ஆம் ஆண்டிலும் தென் மாகாணத்தில் 532 பாதைகளின் கீழ் தினசரி 14438 பயண முறைகளை நடைமுறைப்படுத்துதல், தென் மாகாணத்தில் செயற்படுகின்ற 42 பஸ் நிறுத்துமிடங்களின் கீழ் பொது வசதிகள் போக்குவரத்தை வழங்குதல், ஸ்ரீலங்கம மற்றும் தனியார்துறை ஓட்டுனர்களை பொது போக்குவரத்து கொள்கைகளின் பிரகாரம் தினசரி ஒழுங்குமுறைப்படுத்துதல், ஒட்டுமொத்த பயணிகளுக்கு ஏற்புடையதான பொது வசதிகளைக் கட்டியெழுப்பி தொடர்ச்சியான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக பங்களிப்பை வழங்குதல், பயணிகளின் கோரிக்கையை அடிப்படையாகக்கொண்டு மீண்டும் போக்குவரத்து சேவையை திட்டமிடல், தோன்றுகின்ற வரையறையற்ற போக்குவரத்து சிக்கல்கள் தொடர்பாக தொழில்நுட்ப மூலோபாயங்களின் கீழ் தீர்வுகளைக் காண்பது, செலவை நிர்வகிப்பதற்காக வலுசக்தி பாதுகாப்பு கருத்திட்டங்களுக்கு விசேட கவனம் செலுத்தி நிறுவனத்தின் உற்பத்தித் திறன் சார்ந்ததாக சர்வதேச தரங்களுக்கு அமைவாக போக்குவரத்தின் தரத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக நிகழ்ச்சித்திட்டங்களை அதிகார சபை செயற்படுத்திக்கொண்டிருக்கிறது.