நோக்கு

தென் மாகாணத்தை சுற்றுலா பயணம் முடிகின்ற இடமாக புகழ்பெறச்செய்தல்

அறிமுகம்

ஒரு நாட்டின் வெளிநாட்டு செலாவணியை உற்பத்திசெய்கின்ற முதன்மை மார்க்கமாக சுற்றுலாதுறையைக் குறிப்பிட முடியும். இயற்கை அழகோடு புராதன கலாசார விழுமியங்களைப் பெருமளவில் கொண்டுள்ள நாடு என்றவகையில் இலங்கையும் சுற்றுலாதுறைக்கு விசேட கவனம் செலுத்தியுள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள சுற்றுலா பயணிகளை இலங்கையின்பால் கவர்வதற்காக ஒரு நாடு என்றவகையில் மேற்கொள்ளுகின்ற முயற்சிக்கு கைகொடுத்துதவி தென் மாகாணத்தில் சுற்றுலா கைத்தொழிலை ஊக்குவிக்கும் விடயத்தில் செயலாற்றுகின்ற ஒரே அரச நிறுவனமாக ருஹுணு சுற்றுலா பணியகத்தைக் குறிப்பிட முடியும்.

சுற்றுலா துறைக்கு உரிய தேசிய திட்டங்களையும் கொள்கைகளையும் இணங்கியொழுகி தென் மாகாணத்தில் சுற்றுலா கைத்தொழிலை ஊக்குவிப்பது ருஹுணு சுற்றுலா பணியகத்தின் பிரதான குறிக்கோளாகும். இதன்போது குறிப்பாக உள்நாட்டு சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா நடவடிக்கைகள் தொடர்பாக ஊக்குவித்தல் ஆகிய இரண்டு அம்சங்களிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. இதன் கீழ் தென் மாகாணத்தில் சுற்றுலா சேவையை ஊக்குவித்தல், புதிய சுற்றுலா மையங்களை அடையாளம் காணுதல், ஊக்குவித்தல் மற்றும் அதைத் தழுவி உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திசெய்தல், அத்துறையுடன் சம்பந்தப்பட்ட மனித வளங்களை அபிவிருத்தி செய்தல், சுற்றுலா சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா சேவைகளுடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் பங்காளர் நபர்கள் ஆகியோருக்கு தேவையான உதவிகளை வழங்குதல் என்பவை மேற்கொள்ளப்படுகின்றன. 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் சுமார் 140 மில்லியன் ரூபா நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி தென் மாகாணத்தில் சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு ருஹுணு சுற்றுலா பணியகத்தினால் கருத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக தென் மாகாணத்திற்கு வருகைதருகின்ற உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகளுக்கு தரமான சேவைகளை வழங்குவதற்காக சுற்றுலா வழிகாட்டுனர்களுக்கு வருடாந்தம் பயிற்சியளிக்கப்படுகின்றது. அத்துடன், 2016ஆம் ஆண்டில் 37 வழிகாட்டுனர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. சரியான தகவல்களை வழங்குதல் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் தொல்லைகளைக் குறைத்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு  மேற்கொள்ளப்படுகின்ற சுற்றுலா வழிகாட்டுனர் பயிற்சியினால் தொழில் இல்லா பிரச்சினைக்கு தீர்வாக இருப்பதோடு, தென் மாகாணத்திற்கு வருகைதருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு தரமான சேவையைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியும் தெரிவிக்கின்றோம்.