sec new"சுபீட்சமிகு தெற்கு பெருமிதத்துடன் முன்னோக்கி" என்ற தொனிப்பொருளை முதன்மையாகக் கொண்டு தென் மாகாண மக்களுக்கு வினைத்திறன்மிக்கதும் பயனுறுதி மிக்கதுமான சேவையை வழங்குவது எமது அமைச்சின் நோக்கமாகும்.

இதன் கீழ் பிரதான அமைச்சின் விடயப் பரப்பெல்லைக்கு உரிய திணைக்களங்களையும் நிறுவனங்களையும் நெறிப்படுத்துவதை இணைப்பாக்கம் செய்தும் கண்காணித்தும் தென் மாகாண மக்களுக்கு வினைத்திறன்மிக்க, பயனுறுதிமிக்க, தலைசிறந்த சேவையை இந்த அமைச்சின்மூலம் வழங்குவதற்காக தென் மாகாண கௌரவ ஆளுநர், கௌரவ முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை, கௌரவ உறுப்பினர்கள், பிரதான செயலாளர், ஆளுநரின் செயலாளர், அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர், சபை செயலாளர், அமைச்சுகளின் செயலாளர்கள், ஏனைய திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைவர்கள் ஆகியோருடன் ஒத்துழைப்புடனும் தேவையான சந்தர்ப்பங்களில் ஆலோசனைகளையும் பெற்று செயலாற்றுகிறேன்.

இலங்கையில் மிகச்சிறந்த மாகாண பிரதான அமைச்சைக் கொண்ட தேசமாக உருவாக்கும் நோக்கின் பிரகாரம் சென்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையும் தேசிய உற்பத்தித் திறன் விருது வழங்கும் போட்டியில் அமைச்சுகளுக்கிடையில் இரண்டாவது இடத்தையும் ISO 9001:2008 தர சான்றிதழையும் பெற்று, 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் தென் மாகாண விளையாட்டு வீர முதன்மையைப் பெற்றும், அதன் கீழுள்ள நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டும் அமைச்சின்மூலம் தென்னிலங்கை மக்களுக்கு தமது சேவையை வினைத்திறன்மிக்க வகையிலும் பயனுறுதிமிக்க வகையிலும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கிறது.

அமைச்சுக்குரிய திணைக்களங்களுக்கு நிறுவனங்கள் மூலம் குறித்த விடயங்கள் ஊடாக மக்களின் சுகாதாரம், மக்கள் வாழ்க்கை என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அதேவேளையில், அதன் காரணமாகவே தேசிய அடிப்படையில் ஒப்பிடுகின்றபோது தென் மாகாண சுகாதார சுட்டியை நல்ல நிலையில் பேணி பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தி மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திசெய்து மக்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்குமுகமாக பல்வேறு கிராமிய நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குசெய்து அமைச்சின் கடமையை சிறந்தமுறையில் நிறைவேற்றுகின்றது.

சிறு பிள்ளைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில் கவனம் செலுத்துவதற்கு கௌரவ பிரதான அமைச்சரின் ஆசிர்வாதத்தின் மீது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசணை உதான, மாணவர் மன நலம், நெத்பஹன் (விழி விளக்கு), தயார்நிலையிலிருந்து இடரை இனம் காண்போம், சாரதியின் துணைவர் பாதையின் நண்பன், உத்தியோகபூர்வ முன்னோடி, மூத்தோர் சித்திரை புத்தாண்டு விழா போன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக மக்களுக்கு நெருக்கமான சேவைகளை வழங்குவதற்கு தென் மாகாண பிரதான அமைச்சு நடவடிக்கை எடுக்கிறது.

இவ்வனைத்து வெற்றிகளையும் பெறுவதற்கு எம்மை ஊக்குவித்த அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். அத்துடன், எதிர்வரும் நாட்களில் உத்தேச நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்திக்கொள்ளுவதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.

வய் விக்கிரமசிறி
செயலாளர்,
தென் மாகாண பிரதான அமைச்சு